Monday, March 28, 2016

குருவே துணை

இயல்பூக்க நியதி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினினும் மாற்றங்காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருயுர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்

குரு சீடர் உறவு - முனைப்பை நீக்கு

தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்போது 
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள் 
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்:
உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால்போல
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு 
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?" என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!