Monday, March 28, 2016

குருவே துணை

இயல்பூக்க நியதி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினினும் மாற்றங்காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருயுர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்

குரு சீடர் உறவு - முனைப்பை நீக்கு

தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்போது 
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள் 
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்:
உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால்போல
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு 
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?" என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!

Saturday, October 11, 2014

ஓம் சாந்தி சாந்தி சாந்தி = அமைதி அமைதி அமைதி

கேள்வி: சுவாமிஜி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் 'ஓம் சாந்தி' என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் விடை: 'ஓம்' என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கோத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று, அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க... மௌனமென்ற குணத்தை வைத்து, மாத்திரைக் குறைவான 'ம்' என்ற மகர மெய்யைத் தேர்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம்! அதனுடன்('ம்'-முடன்) சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலதாரதில் எழுந்து துரியத்தில் முடியும் முழு உயிர் எழுத்தாக வருவது 'ஓ' என்ற சப்தம் தான். 'ஓ' என்ற சப்தத்துடன் 'ம்' என்ற மகர ஒற்றை இணைத்து 'ஓம்' என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது(ஓம்) ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது! இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே!

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்று தவ முடிவில் கூறுவது, நாம் எல்லோரும் இறையருளால் அமைதி பொருவோம் என்பதேயாகும்.

விருபப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தையைக் கூறாமல் விட்டு விடட்டுமே! அப்படி விட்டு விட்டால் அதில் ஒரு குறிகிய கண்ணோட்டம் ஏற்பட்டு 'உலக சமுதாயம்' என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது(WCSC - SKY) தவமுரையில் ஒரே சீரான முறையும்(uniformity) போய்விடும்.
.
.
.
.
.
குறிப்பு: அருள்தந்தை அவர்களின் விருப்பப்படி அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மனவளக்கலையை அளித்து வருகிறோம். தவ முடிவில் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்று கூறுவதால் சில பள்ளி, கல்லூரிளில் நமது பயிற்சிக்கு அனுமைதி மறுக்கப்பட்டது. ஒரே சீரான தவமுறை(uniformity) பின்பற்ற வேண்டும், குறிப்பாக மாணவர்களுக்கும் மனவளக்கலை சென்றடைய வேண்டும் என்ற குருவின் உயரிய நோக்கம் நிறைவேற....

தவமுடிவல் ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்பதற்குப் பதிலாக,

என் மனதில் அமைதி நிலவட்டும்
என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி, அமைதி, அமைதி

என்ற சிறு..... மாற்றத்தின் உட்பொருள் உணர்ந்து, குருவின் வழியில் பயணிப்போம்!

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

Wednesday, September 3, 2014

World Peace

World Peace can be achieved through Individual Peace. World Community Service Centre (WCSC), a non-profit society works for it. In 1958 Vethathiri Maharishi started WCSC in India, which teach meditation for Individual Peach/Family Peace/World Peace. Millions of people got benefited by WCSC.

www.vethathiri.edu.in
 

Thursday, July 10, 2014

மனையடி சாஸ்திரம் அவசியம்தானா?

கேள்வி: "சுவாமிஜி, மனையடி சாஸ்திரம் அவசியம்தானா? இதனுடைய தத்துவம் என்ன?"

வேதாத்திரி மகரிஷியின் பதில்: " நான்கு சுவர்களை அமைக்கும்பொழுது அதற்குள் உண்டாகும் காந்தக்களம் மனிதனுக்கு நன்மை செய்வதாக அமைவதோ அல்லது தீமை விளைவிப்பதாக அமைவதோ உண்டு. என்ன நீள, அகல, உயரத்தில் அறை அமைந்தால் அதில் எவ்வாறு காந்தக்களம் அமையும், அந்தக் காந்தக் களத்தில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன நன்மை, தீமைகள் எல்லாம் உண்டாகும் என்று கணக்கிட்டு அறிந்து கூறும் கலைதான் மனையடி சாஸ்திரம். அவ்வாறு நன்மை செய்யக்கூடிய ஒரு காந்தக் களத்தை அமைத்து அதில் வாழ்வது சிறப்பானதே".

மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

கேள்வி: சினம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் சினம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல உள்ளன. மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

வேதாத்திரி மகரிஷி: மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது. தன்முனைப்பிலே 'தான்' 'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு. 'தான்' என்பது அதிகாரப்பற்று (aggressiveness). 'தனது' என்பது பொருள் பற்று (possessiveness). ஆகவே அந்த அதிகாரப் பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது, உயரக்கூடாது" என்ற எண்ணத்தை உடையது. ஆகையினாலே ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவருடைய நோய். உங்களுக்கு ஏன் அந்தக் கவலை ? அதை விட்டுவிடுங்கள். அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. அத்தகைய மனிதர் ஏதேனும் ஒரு பழிச்சொல் சொன்னார், தீங்கு செய்தார் என்றால் அவரை "மனதாரக் காலை, மாலை வாழ்த்துங்கள்". எல்லாம் சரியாகிவிடும்.

Thursday, February 20, 2014

"ஜீவசமாதி" என்பது என்ன?

கேள்வி : சுவாமிஜி, "ஜீவசமாதி" என்பது என்ன? அதுபற்றிய விவரத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேதாத்திரி மகரிஷியின் பதில்: ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளார்கள். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள்

கேள்வி: மகரிஷி அவர்களே, முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் பதில்: பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒருமுறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.

அதாவது ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள. ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பரதிபலிக்கும் வேகம் உண்டு. அதன்பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்து விடும்.

இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலைமுறைகளிலும் (Generations) விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலை முறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலைமுறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.